சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையப்படுத்தி விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரில்லர் படம் ' அந்த நிமிடம்.' (இன்னும் எத்தனை படம்தான் பொள்ளாச்சி மேட்டரப்பத்தி வருமோ).
இலங்கையில், இதுவரை ரசிகர்கள் கண்டிராத- ராமாயணத்தில் இடம்பெற்ற பல இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார். ராம சீதா கோயிலிலும் படம்பிடித்திருக்கிறார்கள்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thatminutes.jpg)
படத்தின் ஹீரோ கேரளா. ஹீரோயின் அமெரிக்கா. செகன்ட் ஹீரோ இலங்கை. செகன்ட் ஹீரோயின் பெங்களூர். இப்படி உலகம் முழுவதும் இருந்து பலரை நடிக்க வைத்திருக்கிறார் தமிழ் இயக்குநர் ஆர். குழந்தை இயேசு.
இந்த திரில்லர் படத்தின் செகன்ட் ஹீரோ- இலங்கையின் முன்னணி கதாநாயகர், டைரக்டர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட "லால் வீரசிங்க.' தனக்கு தமிழ்ப் படங்களில் நடிப்பதே லட்சியம் என்றும், அந்த ஆசை இப்படத்தின்மூலம் நிறைவேறி இருப்பதாகவும் சிலாகிக்கிறார்!
பார்ப்பதற்கு நம்ம ஊர் தியாகராஜன் சாயலில் இருக்கும் லால் வீரசிங்கவிற்கு தமிழ்த் திரைஉலகில் சிறந்த வில்லனாக வலம் வரவேண்டும் என்பது ஆசை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06/thatminutes.jpg)